காவேரிப்பட்டணம்: மின் அலுவலருக்கு மிரட்டல் விடுத்த டிரைவருக்கு காப்பு.

காவேரிப்பட்டணம்: மின் அலுவலருக்கு மிரட்டல் விடுத்த டிரைவருக்கு காப்பு.;

Update: 2025-06-13 14:01 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்துள்ள மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் ரவி (45) டிரைவரரான. இவர் தன் வீட்டின் முன் செல்லும் உயர் மின் அழுத்த மின் கம்பிகளுக்கு கீழ் ஷெட் அமைக்க முயன்ற போது அதை அறிந்து காவேரிப்பட்டணம் மின்வாரிய உதவி பொறியாளர் கார்த்திகேயன் (39) அந்த பகுதிக்கு சென்றார். பின்னர் அவர் ரவியிடம் ஷெட் அமைக்கும் பணியை தடுத்து, அதனை அகற்று மாறு கூறியதாக கூறப்படுகிறது. அப்போது ரவி கார்த்திகேயனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து கார்த்திகேயன் காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் விசாரணை செய்து ரவியை கைது செய்தனர்.

Similar News