வேளாண்மை கல்லூரி மாணவர்கள் சார்பில், ரத்ததான விழிப்புணர்வு பேரணி
விழிப்புணர்வு பேரணி;
தஞ்சாவூர் மாவட்டம் ஆர்.வி.எஸ் வேளாண்மை கல்லூரி மாணவர்கள், தங்களது சமூகப் பணி திட்டத்தின் கீழ் ரத்ததான விழிப்புணர்வு பேரணியை வெள்ளிக்கிழமை நடத்தினர். தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள கிள்ளுக்கோட்டை கிராமத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியை கல்லூரி இயக்குனர் பி.பாண்டியராஜன், முதல்வர் எஸ்.வி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி, 'உங்கள் ரத்தம் ஒரு உயிரை காக்கும்' 'ரத்ததானம் மனித நேயத்தின் உயர்ந்த உருவம்' போன்ற முழக்கங்களுடன் கிராமத்தின் முக்கிய வீதிகளில் வலம் வந்து, ரத்த தானத்தின் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். இதில், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கே.கரிமனிஷா, பி.லிபிராபின், செஞ்சுருள் சங்கம் ரெ.புவனேஸ்வரி, பூதலூர் அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோசகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.