சந்தவாசலில் அதிமுக திண்ணை பிரச்சாரம்
ஆரணி அடுத்த சந்தவாசல் கிராமத்தில் தி.மலை மத்திய மாவட்ட அதிமுக ஜெ.பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் பாரி பாபு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் விமல் ராஜ் அனைவரையும் வரவேற்றார்.;
ஆரணி அடுத்த சந்தவாசல் கிராமத்தில் தி.மலை மத்திய மாவட்ட அதிமுக ஜெ.பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் பாரி பாபு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் விமல் ராஜ் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மத்திய மாவட்ட செயலாளர் எல்.ஜெயசுதா கலந்து கொண்டு அதிமுக ஆட்சியின்போது செயல்படுத்தப்பட்ட மக்கள் நல திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை வீடு, வீடாகவும், பொதுமக்களிடமும், வியாபாரிகள், தொழிலாளர்கள் மற்றும் பெண்களிடம் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். இதில் ஒன்றிய செயலாளர்கள் திருமால், வீரபத்திரன், பாசறை மாவட்ட செயலாளர் செந்தில், மாவட்ட துணைச் செயலாளர் ஜெயகாந்தி வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் பரத் ராஜேந்திரன், நகர மன்ற உறுப்பினர்கள் சுதாகுமார், பாரதிராஜா, விநாயகம், மீனவரணி ஆனந்தன், பேரவை ஒன்றிய செயலாளர் புங்கம்பாடி சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.