போச்சம்பள்ளி அருகே பெரியமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.

போச்சம்பள்ளி அருகே பெரியமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.;

Update: 2025-06-14 01:56 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள சாதிநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. முன்னதாக கோவில் வளாகத்தில் வேள்வி பூஜை நடைபெற்றது. வேள்வி பூஜையின் பூஜிக்கபட்ட புனித நீர் கலசங்களை ஊர்வலமாக எடுத்து சென்று கோபுர கலசங்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தபட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News