டாஸ்மார்க் கடையில் மது பாட்டில்கள் திருட்டு.
மதுரை திருமங்கலம் அருகே பூட்டியிருந்த டாஸ்மார்க் கடையில் மதுபாட்டில்கள் திருடி சென்ற சம்பவம் நடந்துள்ளது.;
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள தோப்பூரில் டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளராக ராஜசேகர்(47). விற்பனையாளர்களாக ரவிக்குமார் மற்றும் கொத்தளம் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இந்த டாஸ்மாக் கடையில் கடந்த மே 2ம் தேதி இரவு 10 மணிக்கு வழக்கம் போல் ராஜசேகர் பூட்டி சென்றார். மறுநாள் காலை 11.50 மணிக்கும் வழக்கம் போல் கடையை திறக்க ஊழியர்கள் வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பின்னர் அலுவலக இளநிலை உதவியாளர் சுப்பிரமணி, மற்றும் பாலகிருஷ்ணனும் கடைக்கு சென்று ஆய்வு செய்த போது 58 மது பாட்டில்கள் திருடுபோனது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.15 ஆயிரத்து 240 ஆகும். இதனால் கடையில் உள்ள கண்காணிப்பு காமிராவை சோதனை செய்த போது மே 3ம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு அடையாளம் தெரியாத ஒரு குரங்கு குல்லா அணிந்த நபர், கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து ராஜசேகர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திருட்டு குறித்த புகார் காலதாமதமாக அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .