அலங்கார திருமஞ்சனத்தில் சக்கரத்தாழ்வார் வழிபாடு
மதுரையில் சக்கரத்தாழ்வாருக்கு அலங்கார திருமஞ்சனத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது;
மதுரை டி எம் கோர்ட் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மதனகோபாலசாமி கோவிலில் இன்று (ஜூன் .14) காலை சக்கரத்தாழ்வாருக்கு சுதர்சன ஹோமம், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார திருமஞ்சனத்தில் ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்றன. இது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சக்கரத்தாழ்வார் அருள் பெற்றனர். வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.