முன்னாள் அமைச்சரை சந்தித்த எம் எல் ஏ
மதுரை சத்திரப்பட்டி காவல் நிலையத்தை பார்வையிட சென்ற அதிமுக எம்எல்ஏ உதயகுமாரை கைது செய்ததால் அவரை திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா நேரில் சந்தித்து பேசினார்.;
மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சத்திரப்பட்டி காவல் நிலையம் நேற்று இரவு குண்டர்களால் தாக்கப்பட்டதையடுத்து காவல் நிலையத்தை பார்வையிட சென்ற அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்களை காவல்துறை கைது செய்துள்ள நிலையில் அவரை நேரில் சந்தித்து நடைபெற்ற சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா விசாரித்தார். உடன் அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் இருந்தனர்.