மதுரையில் சாய்ந்து கிடக்கும் பாஜகவின் கொடி கம்பத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்
மதுரை விமான நிலையப் பகுதியில் பாஜகவினர் கொடி கம்பம் சாலையில் பல இடங்களில் சாய்ந்து கிடக்கிறது.;
மதுரை வலையங்குளம் பகுதியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜகவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இணையும் நிகழ்ச்சி இன்று (ஜூன் .14)மாலை நடைபெற உள்ளது. இதற்காக மதுரை விமான நிலையம் சாலை சுற்றுச் சாலை நெடுஞ்சாலையில் பாஜக கொடி கம்பங்கள் நடப்பட்டுள்ளது.மதுரையில் பலத்த காற்று வீசி வரும் நிலையில் சாலை நடுவே வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பம் நெடுஞ்சாலையில் விழுந்து வாகன விபத்து ஏற்படும் நிலையில் உள்ளது அதனால் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்பட்டு வருகிறது. விபத்தை ஏற்படுத்தும் முன்பே சாலைகளில் மடங்கிய பைப்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.