காட்டு யானைகள் புகுந்ததில் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான தென்னை, வாழை, மாமரங்கள் சேதமானதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.*
காட்டு யானைகள் புகுந்ததில் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான தென்னை, வாழை, மாமரங்கள் சேதமானதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.*;
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே காட்டு யானைகள் புகுந்ததில் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான தென்னை, வாழை, மாமரங்கள் சேதமானதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தர ராஜபுரத்தை சேர்ந்த கணேசன், பழனி முருகன், பாஸ்கரன் ஆகிய சிறு குறு விவசாயிகள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள புல்லு பத்தி காடு அருகே நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் தென்னை, மா மற்றும் வாழை விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களது விளை நிலத்திற்குள் கடந்த சில நாட்களாக வரும் காட்டு யானைகள் அங்கிருந்த 50 தென்னை, 50 வாழை மற்றும் 10 க்கும் மேற்பட்ட மாமரங்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளது. இதனால் தங்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மாம்பழ சீசன் நேரத்தில் யானைகள் மரங்களை ஒடித்து, மாங்காய்களை சேதப்படுத்துவது தொடர் கதையாகி வருவதால் வனவிலங்குகள் விவசாய நிலத்திற்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.