அரசு அலுவலர் ஒன்றியம் விருதுநகர் மாவட்ட தேர்தல் பேரவை கூட்டம் ஒன்றிய மாநில துணைத்தலைவரும் வணிகவரித்துறை மாநில தலைவரும் மாவட்ட தேர்தல் பேரவை கூட்ட தேர்தல்
அரசு அலுவலர் ஒன்றியம் விருதுநகர் மாவட்ட தேர்தல் பேரவை கூட்டம் ஒன்றிய மாநில துணைத்தலைவரும் வணிகவரித்துறை மாநில தலைவரும் மாவட்ட தேர்தல் பேரவை கூட்ட தேர்தல் அலுவலருமான திருமதி.ஆலிஷ் ஷீலா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.;
விருதுநகரில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் விருதுநகர் மாவட்ட தேர்தல் பேரவை கூட்டம் ஒன்றிய மாநில துணைத்தலைவரும் வணிகவரித்துறை மாநில தலைவரும் மாவட்ட தேர்தல் பேரவை கூட்ட தேர்தல் அலுவலருமான திருமதி.ஆலிஷ் ஷீலா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இப்பேரவை கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட தலைவராக மருத்துவத்துறையைச் சேர்ந்த திரு.பாலமுருகன் அவர்களும், மாவட்ட செயலாளராக கல்வித்துறைச் சேர்ந்த திரு..சாணக்கியன் அவர்களும், மாவட்ட பொருளாளராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை திரு. .பாண்டி அவர்களும் மற்றும் இதர பதவிகளுக்கான மாவட்ட நிர்வாகிகள் தேர்வு ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட அனைத்து வட்ட கிளை தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் அனைத்து நிர்வாகிகள் சேர்ந்து போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்தனர். இப்பேரவை கூட்டத்தில் மாவட்ட தலைவர் அய்யாதுரை, மாவட்ட பொருளாளர் திரு.துரைச்சாமி அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். மேலும் இப்பேரவை கூட்டத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் இணைப்புச் சங்க நிர்வாகிகளான வேளாண்மை துறை திரு.ராம்கோபால், மருத்துவ துறை திரு.பெருமாள் சாமி, அங்கன்வாடி சங்கம் திருமதி.முத்துகனி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை காப்பாளர் ஆசிரியர் சங்கம் திரு.ஜெ.ஜனகராஜ், சித்தா மற்றும் யோகா பிரிவு ஆறுமுகம், ஆதிதிராவிடர் நலத்துறை ஆசிரியர் சங்கம் திரு.சுந்தரமூர்த்தி, கல்வித்துறை திரு.யோகராஜ், திரு.சரவணன் திரு.உதயகுமார், விடுதி பணியாளர் சங்கம் திரு.ரவி, கூட்டுறவுத்துறை திரு.முருகன், பொதுப்பணித்துறை திரு.முத்து முருகானந்தம், வணிகவரித்துறை திரு.சண்முகசுந்தரம், நெடுஞ்சாலை துறை திரு.மாரிசாமி, நில அளவைத் துறை திரு.செந்தில்குமார், செவிலியர் பணி மருத்துவத்துறை திருமதி.சீலியா, மருந்தாளுனர் சங்கம் திரு.மணி சங்கர் உட்பட 300 க்கும் மேற்பட்ட ஒன்றிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.