மாதாந்திர கவாத்து பயிற்சியை பார்வையிட்ட காவல் ஆணையர்

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இன்று வாராந்திர கவாத்து பயிற்சி காவல் ஆணையர் முன்னிலையில் நடைபெற்றது.;

Update: 2025-06-14 15:42 GMT
மதுரை நகரில் வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் காவலர் குறைதீர்க்கும் நாள் இன்று (14.06.2025) மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், நடைபெற்ற காவலர்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியை மாநகர காவல் ஆணையர் முனைவர் லோகநாதன் அவர்கள் பார்வையிட்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கியும், காவலர்களின் குறைகளை கேட்டு அறிந்ததுடன் விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் இன்றைய கவாத்து பயிற்சியின் போது காவல்துறை அரசு வாகனங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் காவல் உயர் அதிகாரிகள் பலர் இருந்தனர்.

Similar News