கோவை: நாயை விரட்டிக் கொண்டு வீட்டுக்கே நுழைந்த சிறுத்தை !

கோவை சோமையனூர் திருவள்ளுவர் நகர் பகுதியில்,நேற்று இரவு வீட்டின் வாசல் கேட் வரை நுழைந்து நாயை வேட்டையாட வந்த சிறுத்தை, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2025-06-15 01:37 GMT
கோவை சோமையனூர் திருவள்ளுவர் நகர் பகுதியில்,நேற்று இரவு வீட்டின் வாசல் கேட் வரை நுழைந்து நாயை வேட்டையாட வந்த சிறுத்தை, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுதர்சன், வாணி ஆகியோரது வீட்டு முன் இருந்த நாய்களை துரத்திக் கொண்டு வந்த சிறுத்தை, வீட்டு கேமராவில் சிக்கியது. இதில், ஒரு நாயை கவ்வ முயன்ற சிறுத்தை பிடியில் இருந்து, நாய் சற்றும் தாமதமின்றி தப்பிய காட்சி பதிவாகியுள்ளது. இதற்கு முன்னரும், அந்த பகுதியில் கருஞ்சிறுத்தை உள்பட மர்ம விலங்குகள் கால்நடைகளை வேட்டையாடியிருந்ததால், வனத் துறை கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. தற்போதைய சம்பவம் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News