போச்சம்பள்ளளி: ஜாமீனில் வெளியில் வந்தவர் மீண்டும் கைது.

போச்சம்பள்ளளி: ஜாமீனில் வெளியில் வந்தவர் மீண்டும் கைது.;

Update: 2025-06-15 02:51 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்துள்ள மயிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (46) கொத்தானார். போச்சம்பள்ளி போலீசார் இவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப் பது. தகராறில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்த நிலையில் போச்சம்பள்ளி கோர்ட்டில் தினமும் கையெழுத்திடும் வகையில் சரவணன் நிபந்தனை ஜாமீன் பெற்றார். நேற்று முன்தினம் அவர் குடிபோதையில் போச்சம்பள்ளி கோர்ட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் அங்கிருந்தவர்களிடம் தகராறு செய்தும், ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து நீதிமன்ற தலைமை எழுத்தர் சத்யபிரியா அளித்த புகாரின்பேரில் போச் சம்பள்ளி போலீசார் சரவணனை கைது செய்தனர்.

Similar News