புதிய சாலை பூஜையில் அமைச்சர் பங்கேற்பு
மதுரை பெத்தானியபுரம் பகுதியில் புதிய சாலைகள் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.;
மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெத்தானியபுரம் பகுதி உள்ள ஏழு வார்டுகளில் உள்ள சாலைகளில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை இன்று (ஜூன் .15) நடைபெற்றது.இந்த பூமி பூஜை நிகழ்வுக்கு வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் தலைமை தாங்கினார். உடன் மாநகர் மேயர் இந்திராணி மற்றும் அப் பகுதி வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள், திமுக முக்கிய நிர்வாகிகள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.