லாரி மோதியதில் டூவீலரில் சென்றவர் பலி

மதுரை அருகே நடந்த சாலை விபத்தில் டூவீலரில் சென்றவர் பலி.;

Update: 2025-06-15 10:45 GMT
மதுரை மாவட்டம் கூடல் நகர் சங்கீதா நகரை சேர்ந்த கோபால் என்பவர்( 69) தனது இருசக்கர வாகனத்தில் நேற்று (ஜூன்.14) காலை மதுரை- அலங்காநல்லூர் ரோடு பூதகுடி சாலையில் உள்ள ரோசலின் வீடு அருகே சென்று கொண்டிருந்த பொழுது செக்கானூரணி பன்னியானை சேர்ந்த கணபதி என்பவர் ஓட்டி வந்த லாரி இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பாக மனைவி அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News