கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள காட்டகரம் ஊராட்சிக்கு உட்பட்ட சந்தூரில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. மாடப்பள்ளி டாக்டர் மூர்த்திஸ் கண் மருத்துவனை மற்றும் காட்டாகரம் ஊராட்சி மன்றம் இணைந்து நடத்திய கண் சிகிச்சை முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண் பரிசோதித்து செய்து கொண்டனர்.