ஊத்தங்கரை:சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு பதிவு.

ஊத்தங்கரை:சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு பதிவு.;

Update: 2025-06-16 01:09 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள கெங்கபிராம்பட்டி பகுதியை சேர்ந்த விஜயன் மகன் லோகேஸ்வரன் (29) இவரும், ரெட்டிப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமியும், காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந் நிலையில் இவர்கள் பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக மாவட்ட சமூக நல மகளிர் உரிமைத்துறைக்கு தகவல் வந்தது அதன்பேரில் சமூக நல அலுவலர் காந்திமதி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டதில் லோகேஸ்வரன் சிறுமியை திருமணம் செய்தது தெரிய வந்தது. இதை அடுத்து அவர் இதுகுறித்து ஊத் தங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் லோகேஸ்வரன் மீது வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News