என்.ஐ.டி ரூர்கேலாவில் உலோகப் பொறியியல் படிப்பிற்கு தேர்வான மாணவருக்கு பாராட்டு
என்.ஐ.டி ரூர்கேலாவில் உலோகப் பொறியியல் படிப்பிற்கு தேர்வான மாணவருக்கு பாராட்டு;
நான் முதல்வன் திட்டத்தின் கல்லூரி கனவு நிகழ்வின் மூலம் ஐஐடி ஜேஇஇ நுழைவுத் தேர்வு பயிற்சியும் வழிகாட்டுதலும் பெற்ற, விருதுநகர் மாவட்டம், நரிக்குடி வட்டாரம், இலுப்பையூர் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர், லாரி டிரைவர் மகன், என்.ஐ.டி ரூர்கேலாவில் உலோகப் பொறியியல் Metallurgical Engineering படிப்பிற்கு தேர்வாகியுள்ளார். மாணவரை நேரில் அழைத்து பாராட்டி மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப அவர்கள்,விருப்புரிமை நிதியிலிருந்து ரூபாய் 5000 வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.