கோவை: மண்பானையில் நடனமாடிய மாணவி !

முருக பக்தர்கள் மாநாடு வெற்றி பெற, கோவை சின்மயா அரங்கில் மண்பானையில் மீது நடனமாடிய மாணவி.;

Update: 2025-06-17 03:19 GMT
மதுரை பாண்டி கோவில் அருகே அம்மா திடலில் ஜூன் 22-ஆம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு, கோவை சின்மயா அரங்கில் இந்துமுன்னணி பேரியக்கம் சார்பில் ஆன்மிக விழா நடைபெற்றது. இதில், மாணவி பிரியங்கா மண் பானையில் நின்று இடுப்பில் வளையம் அணிந்து முருக பக்திப் பாடல்களுக்கு பக்திப் பரவசத்துடன் நடனமாடினார். அவரது ஆட்டம் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. ஜூன் 22-ஆம் தேதி மதுரை அம்மா திடலில் நடைபெறும் மாநாட்டில் இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக தலைவர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள முருக பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். மாநாட்டில் கந்த சஷ்டி கவச பாராயணம், ஆன்மிக உரைகள், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், அறுபடை வீடுகள் குறித்த கண்காட்சிகள் உள்ளிட்டவை இடம்பெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News