கோவை: குடிநீருக்காக தோண்டப்பட்ட குழிக்குள் இறங்கிய லாரி !
கோவை இருகூர் தண்ணீர் டேங்க் அருகே நேற்று குடிநீருக்காக தோண்டப்பட்ட குழிக்குள் கொரியர் லாரி ஒன்று இறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.;
கோவை இருகூர் தண்ணீர் டேங்க் அருகே நேற்று குடிநீருக்காக தோண்டப்பட்ட குழிக்குள் கொரியர் லாரி ஒன்று இறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. லாரியை ஓட்டியவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. விபத்துக்குப் பின், மயக்க நிலைக்கு ஆளான அவர் லாரியில் நிதானமின்றி படுத்து கிடந்தார். இந்த காட்சி அருகே சென்ற பொதுமக்களையும் வாகன ஓட்டிகளையும் அச்சத்தில் ஆழ்த்தியது. அவரை எழுப்ப முயன்றபோது கீழே விழுந்த ஓட்டுநர், மீண்டும் எழ முடியாமல் மயக்கத்தில் இருந்தார். சம்பவம் தொடர்பாக தகவலறிந்த சிங்காநல்லூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். குடிநீர் குழிக்குள் லாரி விழுந்த வீடியோ காட்சிகள் வெளியாகி, கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.