கோவை: நகைக்கடை கொள்ளை- கேரளாவில் காரும், லாரியும் மீட்பு!
1.25 கிலோ தங்க கட்டி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், காரும் லாரியும் மீட்கப்பட்டுள்ளது.;
சென்னையில் இருந்து 1.25 கிலோ தங்க கட்டிகளை வாங்கி கேரளா திருச்சூருக்கு காரில் வந்த நகைக்கடை வியாபாரி ஜெய்சன் ஜேக்கபின் (வயது 55) காரை, கே.ஜி.சாவடி அருகே 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கார் கண்ணாடியை உடைத்து தங்கத்தை கொள்ளையடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கோவை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின்படி 5 தனிப்படை அமைக்கப்பட்டு, கேரளாவில் முகாமிட்டுள்ளது. கொள்ளையில் பயன்படுத்தப்பட்ட கேரளா பதிவு எண் கொண்ட லாரி எட்டிமடை அருகே கண்டறியப்பட்டது. நகைக்கடை உரிமையாளர் பயணித்த கார், கேரளா மாநிலம் வழுக்கல் பகுதியில் நேற்று தனிப்படை போலீசால் மீட்கப்பட்டது. மர்ம கும்பலை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது.