மேல்விஷாரம் அருகே திடீரென தீப்பற்றி எரிந்த கார்
திடீரென தீப்பற்றி எரிந்த கார்;
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நிஸ்வான் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் இன்று காலை திடீரென தீப்பற்றி எரிந்தது. கார் தானாகவே தீப்பிடித்ததைக் கண்டு அதன் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து ஆற்காடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.