கோவில் கும்பாபிஷேக விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு!
ஸ்ரீ ஜெய் அனுமான் கோயில்களில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.;
வேலூர் மாவட்டம் செதுவாலை ஆலமரத்து தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சீனிவாச பெருமாள், துர்கை, விநாயகர், முருகர், ஸ்ரீ ஜெய் அனுமான் கோயில்களில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இறைவன்காடு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய ஸ்ரீ சம்பத் சுவாமிகள் கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் கவுன்சிலர் கே.எம்.வெள்ளை, விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.