அரசு பள்ளியில் அதிகாரி ஆய்வு
பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் மரகதவள்ளி, இப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களின் கற்றல் தொடர்பாக கேட்டறிந்தார்.;
அருமடல் அரசு பள்ளியில் அதிகாரி ஆய்வு பெரம்பலூர் ஒன்றியம் செங்குணம் ஊராட்சிக்கு உட்பட்ட அருமடல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் மரகதவள்ளி, இப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களின் கற்றல் தொடர்பாக கேட்டறிந்தார். பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகன் மற்றும் உதவி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.