பூதலூர் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டட வசதி செய்து தரக் கோரிக்கை 

கோரிக்கை;

Update: 2025-06-17 16:34 GMT
தஞ்சாவூர் மாவட்டம், கல்லணையில், ஞாயிற்றுக்கிழமை மாலை  பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டு, தஞ்சை செல்லும் வழியில், பூதலூர் நான்கு ரோட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் தெற்கு ஒன்றியக் குழுவின் சார்பில், ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் தலைமையில், நிர்வாகிகள் சரவணன், ராஜு,  முருகன், ராஜகோபால், கோவிந்தராஜ், முத்துகிருஷ்ணன், கண்ணன்,  பாலு, ராமலிங்கம், சோலை. தெட்சிணாமூர்த்தி மற்றும் கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர்.  அதில், "பூதலூர் அரசு மருத்துவமனைக்கு அனைத்து வசதிகளுடனும் கூடிய 3+1 கட்டிட வசதி செய்து தர வேண்டும் எனவும், 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியாற்றுவதற்கு உத்தரவிட வேண்டும்" எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Similar News