ராமேஸ்வரம் - சார்லப்பள்ளி வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (07696) ஜூன் 13, 20 ,27, வெள்ளிக்கிழமை காலை ராமேஸ்வரத்தில் இருந்து காலை 09.10மணிக்கு புறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பரமக்குடி மற்றும் சத்திரக்குடி ரயில் நிலையப் பகுதியில், பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், ரயில் புறப்படும் நேரத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவிப்பு தெரிவிக்கிறது. இதன்படி, வருகிற ஜூன் 20 மற்றும் 27 வெள்ளிக்கிழமைகளில் ராமேஸ்வரம் சார்லப்பள்ளி விரைவு ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து இரவு 07.00 (19.00) மணிக்கு புறப்படும். இந்த ரயில் பட்டுக்கோட்டைக்கு வெள்ளிக்கிழமை இரவு 11.12 மணிக்கும், திருவண்ணாமலைக்கு சனிக்கிழமை காலை 07.04மணிக்கும், திருப்பதிக்கு சனிக்கிழமை காலை 11.11 மணிக்கும் சென்றடைந்து, சார்லப்பள்ளிக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 02.00 மணிக்கு சென்றடையும். இந்த ரயிலில் செல்ல விருக்கும் ரயில் பயணிகள் இந்த நேரம் மாற்றத்தை அனுசரித்து பயணம் செய்யுமாறு பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்போர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.