ஐஐடிக்கு தேர்வான மாணவியை பாராட்டிய திமுகவினர்
ஐஐடிக்கு தேர்வான மாணவியை பாராட்டிய திமுகவினர்;
நான் முதல்வன் திட்டத்தின் கல்லூரி கனவு நிகழ்வின் மூலம் ஐஐடி ஜேஇஇ நுழைவுத் தேர்வு பயிற்சியும் வழிகாட்டுதலும் பெற்ற, விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம் படந்தால் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி, பட்டாசு ஆலை கூலித் தொழிலாளரின் மகள் செல்வி யோகேஸ்வரி , ஐஐடி மும்பையில் Aerospace Engineering படிப்பிற்கு தேர்வாகியுள்ளார். அவருக்கு விருதுநகர் தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் திரு. வினோத் குமார் கடற்கரைராஜ் அவர்கள் ரூ.10,000/- ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டினார். மேலும், சாத்தூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியங்களின் மாணவரணி மற்றும் நகர மாணவரணி சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர். கலைஞரின் சிலை பரிசாக வழங்க்பட்டது.