வத்திராயிருப்பு அருகே உள்ள தாணிப்பாறை சர்வேஸ்வரர் கோவிலில் சிறப்பு வேள்வி பூஜை.*
வத்திராயிருப்பு அருகே உள்ள தாணிப்பாறை சர்வேஸ்வரர் கோவிலில் சிறப்பு வேள்வி பூஜை.*;
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள தாணிப்பாறை சர்வேஸ்வரர் கோவிலில் சிறப்பு வேள்வி பூஜை. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தாணிப்பாறை பகுதியில் சர்வேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வத்திராயிருப்பு மற்றும் சற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராள மான பக்தர்கள் தரிசனம் செய்து நேர்த்திக்கடன்களையும் செலுத்தி வருகின்றனர். இந்தக் கோலியில் 18 சித்தர்கள் மற்றும் விநாயகர், வராகி அம்மன் பைரவர், 18 ஆம் படி கருப்பசாமி தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட சன்னதிகள் அமைந்துள்ளன. இதில் சித்தர்கள் சன்னதிகளுக்கு கீழே தலா ஒருவர் உட்கார்ந்து தியானம் செய்யும் வகையில் தியான மண்டபங்கள் உள்ளன.இந்த கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் சித்தர்கள் சன்னிதானத்திற்கு கீழ் அமைக்கப்பட்டுள்ள தியான மண்டபத்தில் தங்களுக்குரிய நட்சத்திரத்தில் உள்ள சித்தர்களுக்கு கீழ் அமர்ந்து தியானம் செய்து வழிபாடு செய்து வருகின்றனர். இந்தக் கோவிலில் ஏற்கனவே உலக அமைதிக்காகவும்,உலக மக்களுக்கு நோய் நொடி இல்லாத வாழ்க்கையை கொடுக்கவும் 108 நாள் வேள்வி பூஜை நடந்து வந்தது. இந்த நிலையில் 108 வது நாள் வேள்வி யாக பூஜை நடைபெற்றது.அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த வேள்வி பூஜை யாகசால பூஜைகளுடன் தொடங்கியது.அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய யாகசாலை பூஜையானது நான்கு கட்டமாக நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் புனித நீரால் சர்வேஸ்வரர் சுவாமிக்கும், ஸ்வர்ணாகர்ஸ்ண பைரவர் சுவாமிக்கும்,புவனேஸ்வரி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது பின்னர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இந்த சிறப்பு வேள்வி பூஜையில் சுற்றுவட்டார கிராம பொது மக்கள் ஏராளமான கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.