மதுக்கூர் ஒன்றியத்தில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்

பிரச்சார இயக்கம்;

Update: 2025-06-18 16:08 GMT
ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை கண்டித்தும், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.  இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் நகரம், பெரம்மையா கோவில், மதுக்கூர் பேருந்து நிலையம், முக்கூட்டு சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆட்டோவில் ஒலிபெருக்கி வைத்து, துண்டுப் பிரசுரம் வழங்கி ஒன்றியச் செயலாளர் வை.சிதம்பரம் தலைமையில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.  மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வி, மூத்த தலைவர்கள் ஆர்.சி.பழனிவேலு,  ஆர்.காசிநாதன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தெ.பஞ்சாட்சரம், பி.ஜெயந்தி, ஏ.கே.எஸ்.வெற்றிச்செல்வம், பி.அமல்ராஜ், கிளைச் செயலாளர்கள், தோழர்கள் பங்கேற்றனர். கோரிக்கைகள் இதில், ஒன்றிய அரசு மாநில உரிமைகளை பறிக்கக் கூடாது. வெறுப்பு அரசியலை விதைத்து, மத மோதலை தூண்டக்கூடாது. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை சீரழிக்கக் கூடாது. வக்பு திருத்த சட்டம், குடியுரிமைச் சட்டம், தொழிலாளர் விரோதச் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். குறைந்தபட்ட ஆதார விலையை சட்டமாக்க வேண்டும். விவசாயிகளின் பயிர்க்கடனை ஒரு முறையாவது தள்ளுபடி செய்ய வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தியும், அனைத்து துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பட்டியலின மக்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும். காவல்துறையின் தவறான செயல்பாடுகளை முறைப்படுத்த வேண்டும். குடிமனையில்லாத அனைவருக்கும் மனைப்பட்டா வழங்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும். மாதாந்திர மின் அளவீடு கணக்கெடுப்பை நடத்த வேண்டும்" என பிரச்சார இயக்கத்தில் வலியுறுத்தப்பட்டது.

Similar News