சந்தனக்குட ஊருஸ் திருவிழாவுக்கு அழைப்பு!
கரீமுல்லாஷா காதிரி தர்காவின் 62வது சந்தனக்குட ஊருஸ் வரும் ஜூன் 21ம் தேதியன்று நடைபெற உள்ளது;
வேலூர், கொணவட்டம் பகுதியில் அமைந்துள்ள கரீமுல்லாஷா காதிரி தர்காவின் 62வது சந்தனக்குட ஊருஸ் வரும் ஜூன் 21ம் தேதியன்று நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து திருவிழாவின் அழைப்பிதழை தர்கா கமிட்டி நிர்வாகியும் அதிமுக பிரமுகருமான ஏ.ஜெ.என். பயாஸ் அஹமத், வேலூர் அதிமுக மாவட்டச்செயலாளர் எஸ்.ஆர்.கே அப்புவிடம் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.