ஸ்ரீவேம்புலிஅம்மன் மகாகும்பாபிஷேகம் முன்னிட்டு யாகவேள்வி அமைக்க பந்தக்கால் நடும் விழா.

ஆரணி கோட்டை ஸ்ரீ வேம்புலிஅம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேக ம் நடைபெறுவதை முன்னிட்டு யாகவேள்வி அமைக்க பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது.;

Update: 2025-06-18 18:35 GMT
ஆரணி கோட்டை ஸ்ரீ வேம்புலிஅம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேக ம் நடைபெறுவதை முன்னிட்டு யாகவேள்வி அமைக்க பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. ஆரணி கோட்டை ஸ்ரீ வேம்புலி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகள் முடிந்த நிலையில் வரும் ஆடி வெள்ளி விழா தொடங்குவதற்கு முன்பாகவே ஜூலை16ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனால் ஆலயத்தில் ஆலய வளாகத்தை சீரமைத்தல், கோபுரங்களில் பஞ்சவர்ணம் செய்வது, கோயிலின் ராஜ கோபுர வாயில்கதவிற்கு பித்தளை தகடு அமைப்பது உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டு ஜூலை 16 அன்று மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக மகாகும்பாபிஷேகத்தில் யாகசாலை பூஜை நடத்துவதற்காக யாகவேள்வி அமைக்க காரைக்கால் குழுவினரை வரவழைத்து யாகவேள்வி அமைக்க பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இதில் தொடர்ந்து பந்த காலுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், உள்ளிட்ட மங்களப் பொருட்கள் கொண்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் பந்தகால் நடப்பட்டன. இதில் விழாக்குழுத்தலைவர் ஜி.வி.கஜேந்திரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி ஜெயஸ்ரீ, கோயில் நிர்வாகிகள் பி.நடராஜன் , நேமிராஜ், ஆர்.சுப்பிரமணி, பேராசிரியர் கு.சிவா, ஆ,சரவணன், வி.டி.எஸ்.சங்கர், இரும்பேடு வேலு, பையூர் சரவணன், சித்தேரி ஜெகன், வளையாபதி, இளையராஜா உளளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News