கோவை: சாமி சிலைகள் உடைப்பு !
பிளாக் மாரியம்மன் கோவிலில், விநாயகர், இராகு, கேது உள்ளிட்ட சிலைகள் உடைக்கப்பட்டு இருப்பது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ பிளாக் மாரியம்மன் கோவிலில், விநாயகர், இராகு, கேது உள்ளிட்ட சிலைகள் உடைக்கப்பட்டு இருப்பது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. கோவில் பூசாரியின் அறிவிப்புடன், தகவல் பரவி பொதுமக்கள் பெரும்பாலானோர் அவ்விடத்தில் கூடியது பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்த சூலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் தங்கராமன் மற்றும் சூலூர் காவல் ஆய்வாளர் லெனின் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அருகிலுள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை நடந்து வருகிறது. பாதுகாப்பிற்காக கோவிலில் அதிக அளவில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.