கோவையில் போதைப் பொருள் விற்ற பைனான்ஸ் அதிபர் கைது!

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கோவையில் பைனான்ஸ் செய்தும் போதைப்பொருள் விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.;

Update: 2025-06-19 03:53 GMT
கோவை மாநகர பகுதியில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சூழலில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (37) என்பவர், கோவையில் பைனான்ஸ் செய்தும், ரகசியமாக கஞ்சா மற்றும் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்று வந்ததும் தெரியவந்தது. புதூரில் அறை எடுத்து தங்கி போதைப்பொருள்கள் விற்பனை செய்த அவர், அந்த பணத்தில் தங்க நகைகள், விலை உயர்ந்த கார் போன்றவற்றை வாங்கி குவித்துள்ளார். போலீசார் அவரது அறையில் நடத்திய சோதனையில் 525 கிராம் கஞ்சா மற்றும் மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்டது. சதீஷ்குமாரிடம் இருந்து தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்த கோவை மாநகர போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.

Similar News