கோவை: வழிப்பறி செய்த நபர் கைது: தப்ப முயன்றபோது படுகாயம்!

பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர் போலீசாரிடம் தப்ப முயன்ற போது படுகாயம் அடைந்தார்.;

Update: 2025-06-19 04:01 GMT
கோவையில் தனியாக நடக்கும் பெண்களை குறிவைத்து நகை பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்த நிலையில், இருகூரில் நாகரத்தினம் என்ற பெண்ணிடம் சங்கிலி பறிக்கப்பட்டது. சிசிடிவி பதிவுகள் மூலம் வழிப்பறியில் ஈடுபட்டவர் சென்னை திரு.வி.க. நகரைச் சேர்ந்த முகமது சாதிக் என்பதும், அவர் மீது பல வழிப்பறி மற்றும் போதை மருந்து வழக்குகள் இருப்பதும் சிங்காநல்லூர் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. அவரை பிடிக்க முயன்ற காவலர்களிடம் இருந்து தப்பிக்க, மேம்பாலத்தில் இருந்து குதித்த முகமது சாதிக், கை, கால்களில் படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை, சிகிச்சைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் நேற்று அடைத்தனர்.

Similar News