கீழ்களத்தூரில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

கீழ்களத்தூரில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்;

Update: 2025-06-19 04:48 GMT
நெமிலி ஒன்றியம் கீழ்களத்தூர் ஊராட்சியில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடைகளுக்கான சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் மா.வ.குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நெமிலி கால்நடை உதவி மருத்துவர் நந்தகுமார் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தார். அப்போது சிறப்பாக கால்நடை வளர்த்த 3 நபர்களுக்கும், நல்ல முறையில் பசுமாட்டு கன்றுகளை பராமரிப்பவர்களை தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கி, கால்நடைகளுக்கு தேவையான தீவன விதைகள், தாது உப்பு கட்டிகள் வழங்கப்பட்டது. முகாமில் கீழ்களத்தூர் ஊராட்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங் களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் கலந்துகொண்டனர். முகாமில் 625 கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. ஊராட்சி செயலாளர் அருள், கால்நடை ஆய்வாளர் தினகரன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News