ஆரணியில் முன்விரோத காரணமாக உடன் பயிலும் மாணவனை கத்தியால் குத்திய மாணவனால் பரபரப்பு.
தொடர்ந்து தமிழகத்தில் பள்ளிகளில் முன்விராத மோதல்கள் நடைபெற்று வருகிறது நடவடிக்கை எடுக்குமா பள்ளி கல்வித்துறை பொதுமக்கள் கேள்வி?;
ஆரணி அருகே சேத்துப்பட்டு சாலை துந்தரீகம்பட்டு பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவனும் இதேபோன்று வந்தவாசி சாலை கல்லேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவனும். இவர்கள் இருவரும் ஆரணி டவுன் கோட்டை மைதானம் அருகே உள்ள அரசு உதவி பெறும் சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றனர். மேலும் சதீஷ்குமாருடன் வசீகரன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று வழக்கம் போல பள்ளி செல்ல பேருந்தில் பயணம் செய்து இருவரும் ஆரணி டவுன் பகுதிக்கு வந்துள்ளனர் அப்போது கோட்டை மைதானம் அருகே இருவரும் பேருந்தில் இருந்து இறங்கியபோது சதீஷ்குமாரிடம் வசீகரன்க்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாணவன் வசீகரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சதீஷ்குமார் தோலில் குத்தியுள்ளார் பின்னர் இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த ஆரணி நகர போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து தமிழகத்தில் பள்ளிகளில் முன்விராத மோதல்கள் நடைபெற்று வருகிறது நடவடிக்கை எடுக்குமா பள்ளி கல்வித்துறை பொதுமக்கள் கேள்வி?