தஞ்சாவூரில், போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு 

பயிற்சி வகுப்பு;

Update: 2025-06-19 12:48 GMT
தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கிவரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக டிஎன்பிஎஸ்சி & டிஎன்யுஎஸ்ஆர்பி போன்ற போட்டித்தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.  இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் அதிக அளவில் பங்கு பெற்று பயனடைந்து வருகின்றனர்.  தற்போது டிஎன்பிஎஸ்சி தொகுதி 4 மற்றும் டிஎன்யுஎஸ்ஆர்பி SI ஆகிய தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி 4 தேர்விற்கான அறிவிக்கை 25.04.2025 அன்று வெளியிடப்பட்டு, தேர்வு 12.07.2025 அன்று நடைபெற உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இத்தேர்விற்கு தயாராகி வரும் போட்டித் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் டி.என்.பி.எஸ்.சி தொகுதி 4   தேர்விற்கான மாநில அளவில் இலவச மாதிரித் தேர்வு, தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் எதிர்வரும் ஜூன் 21, 28 மற்றும் ஜூலை 05 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி 4 தேர்விற்கான மாநில அளவிலான இலவச மாதிரித் தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 20.06.2025 க்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம்.   மேலும், விவரங்களுக்கு 04362-237037 என்ற அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

Similar News