தஞ்சாவூர் மாவட்டத்தில் சிபிஎம் மக்கள் சந்திப்பு இயக்கம்
மக்கள் சந்திப்பு இயக்கம்;
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஒன்றியத்தில், ஒன்றிய மோடி அரசின் மக்கள்க் விரோதக் கொள்கைகளை கண்டித்தும், தமிழக அரசு தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு பிரச்சார நடை பயணம் பேருந்து நிலையத்தில் துவங்கி, தலைமைத் தபால் நிலையம், பெரிய தெரு, சின்னையா தெரு, அறந்தாங்கி சாலை, காந்தி சிலை, தபால் நிலையம் வழியாக மீண்டும் பேருந்து நிலையத்தில் முடிவுற்றது. பிரச்சார பயணத்திற்கு சிபிஎம் பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன் கலந்து கொண்டு பிரச்சார பயண நோக்கத்தினை விளக்கிப் பேசினார். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கு.பெஞ்சமின், ரெ.ஞானசூரியன், எம்.சாமிநாதன், மோரிஸ் அண்ணாதுரை, முருக. சரவணன், மூத்த தோழர்கள் கே.கிருஷ்ணமூர்த்தி, எஸ். பாலகிருஷ்ணன், கே.பாலசுப்பிரமணியன், மகாலிங்கம், தமிழய்யா, சிவகாமசுந்தரி, ஆசைத்தம்பி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பேராவூரணி பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள பின்னவாசல், படப்பனார்வயல், சித்தாதிக்காடு, புதுக்குடியிருப்பு, கொன்றைக்காடு ஆகிய பகுதிகளில் புதன்கிழமை, வியாழக்கிழமை பிரச்சார இயக்கம் நடைபெற்றது. பேராவூரணி சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வே.ரெங்கசாமி தலைமையில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சி.ஆர்.சிதம்பரம், உலகநாதன், ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.