சேலத்தில் கோவில் திருவிழா நடத்த அனுமதிக்க வேண்டும்

போலீஸ் கமிஷனரிடம் பொதுமக்கள் மனு;

Update: 2025-06-20 08:47 GMT
ஓமலூர் அருகே உள்ள தேக்கம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் போலீஸ் கமிஷனரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தேக்கம்பட்டி ஊராட்சியில் கிராமத்தின் மையப்பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 150 ஆண்டுகளுக்கு மேலாக ஊர் மக்கள் வழிபாடு செய்து வந்தனர். ஆனால் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த திருவிழாவின்போது சிலரின் தனிப்பட்ட காரணங்களுக்காக இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும் வகையில் வருவாய்த்துறை அதிகாரிகள் தற்காலிகமாக கோவிலை இழுத்து பூட்டினர். தற்போது கிராம மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். கிராம மக்களிடையே எந்தவித வேற்றுமைகளும் இல்லை. எனவே, கோவிலை திறந்து வழிபாடு நடத்தவும், திருவிழா நடத்தவும் அனுமதி வழங்க வேண்டும். இது தொடர்பாக ஓமலூர் தாசில்தாருக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News