தஞ்சாவூர் மாவட்டத்தில், சிபிஎம் மக்கள் சந்திப்பு இயக்கம்
மக்கள் சந்திப்பு இயக்கம்;
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், மக்கள் சந்திப்பு பிரச்சாரப் பயணத்தின் ஒரு பகுதியாக, செங்கிப்பட்டி கடைவீதியில் வியாழக்கிழமை மாலை பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வினியோகப்பட்டு தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் என்.வி.கண்ணன், எஸ்.தமிழ்ச்செல்வி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சோலை.ரமேஷ், மருதமுத்து, எல்.ராஜாங்கம், சித்திரவேல், எம்.ஜி.சரவணன், அறிவழகன், மலர்க்கொடி மற்றும் காமராஜ், கண்ணன், தங்கமணி, குணசேகரன், மதி, வெங்கடேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் ஒன்றியம், மாத்தூரில், வெள்ளிக்கிழமையன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், இருசக்கர வாகனங்களில் சென்று, மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெறுகிறது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.அபிமன்னன் கொடியசைத்து பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.சரவணன், ஒன்றியச் செயலாளர் எஸ்.கோவிந்தராசு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சி.சரிதா, கே.பன்னீர்செல்வம், எஸ்.வனரோஜா, சௌந்தர்ராஜன், நாகலிங்கம், டி.சண்முகவேல் மற்றும் பலர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு துண்டுப் பிரசுரம் கொடுத்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.