தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை ரயிலில் அடிப்பட்ட முதியவா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அய்யாக்குட்டி (75). இவா் தஞ்சாவூா் பழைய ஆதி மாரியம்மன் கோயில் பகுதியில் தண்டவாளம் அருகே பலத்த காயங்களுடன் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்து கிடந்தாா். இவா் எப்படி இறந்தாா் என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து தஞ்சாவூா் இருப்புப்பாதை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்