குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள்!

குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் : ஆணையர் மதுபாலன் வெளியிட்டார்;

Update: 2025-06-22 02:28 GMT
தூத்துக்குடியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை மாநகராட்சி ஆணையர் மதுபாலன் வெளியிட்டார். குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான உதவி எண்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, யங் இந்தியன்ஸ் ( Yi) அமைப்புடன் இணைந்து சுமார் 1000 விழிப்புணர்வு பிரசுரங்களை மாநகராட்சி ஆணையர் மதுபாலன் வெளியிட்டார். தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் அலெக்ஸ், அனுசுயா ஆகியோர் முன்னிலையில், Yi தூத்துக்குடி தலைவர் அர்ஜுன் சங்கர், மற்றும் முக்கிய பிரதிநிதிகள் ஜோசப் கஸ்சரினோ, செல்வின், மார்சல், சில்வியா ராஜ்குமார், விக்னேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News