கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நான்கு நபர் கைது

பழனி ஆண்டவர் கலை கல்லூரி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நான்கு நபர் கைது செய்யபட்டு சிறையில் அடைப்பு;

Update: 2025-06-22 06:14 GMT
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர பகுதிகளில் காவல் துணை கட்காணிப்பாளர் தனஞ்ஜெயன் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் போலீசார் வழக்கமான ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது பழனி ஆண்டவர் கலை கல்லூரி அருகே சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த நான்கு நபர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். முன்னுக்குப் பின் முரணாக போலீசாரிடம் தகவல் தெரிவித்ததால் நான்கு நபர்களை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் வந்து விசாரணை செய்ததில், அப்பர் தெருவை சேர்ந்த பாஸ்கரன் மகன் நாகேந்திர பிரசாத், புதுநகர் பகுதியைச் சேர்ந்த விலங்கு மணி மகன் மருது, தட்டான்குளம் பகுதியைச் சேர்ந்த வேளாங்கண்ணி மகன் டான் பீட்டர் ஜீவன், தெற்கு தெரு தட்டான் குளம் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் மகன் வெங்கடேஸ்வரன் ஆகியோர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 100 கிராம் கஞ்சா இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News