அரசாணை தமிழக முதல்வர் வழங்க வேண்டும்

ஊரக வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர்களை அழைத்துப் பேசி கோரிக்கைகள் குறித்து அரசாணை தமிழக முதல்வர் வழங்க வேண்டும்- தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்க மாநில தலைவர் ஜான் போஸ்கோ ஹோட்டல் பார்சன்ஸ் கோர்ட்டில் பேட்டி;

Update: 2025-06-22 06:18 GMT
ஊராட்சி வளர்ச்சி பணியாளர்கள் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திண்டுக்கல்லில் உள்ள ஹோட்டல் பார்சன்ஸ் கோர்ட் மீட்டிங் ஹாலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் ஜான் போஸ்கோ கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கிராம ஊராட்சியில் பணியாற்றுகின்ற மேல்நிலைப்பட்டி இயக்குபவர்கள் கடந்த 40 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு மாத ஊதியம் ரூபாய் பத்தாயிரம் மற்றும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மூன்றாண்டு புரியும் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலம் வரை ஊதியமும் மூன்றாண்டிலிருந்து பத்தாண்டுகள் வரை பணியாற்றுபவர்களுக்கு காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக முதல்வர் உங்களை அழைத்து பேசி அரசாணை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். மேல்நிலைப்பள்ளி தொட்டி ஆபரேட்டர்கள், உதவி கணினி ஆப்ரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள், சுகாதார ஊக்குனர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட கடை நிலை பணியாளர்கள் பலர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Similar News