பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாட்டம்
கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் நலன் கருதி அனுமதி மறுப்பு கொடைக்கானல் வனத்துறையினர் அறிவிப்பு;
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் அமைந்துள்ள சுற்றுள்ள தளங்கள் பெருபாலும் வனப்பகுதிகளில் அமைந்துள்ளது. பேரிஜம் அடர் வன பகுதி என்பதால் சுற்றுலா பயணிகள் குறைவாகவே அனுமதிக்க படுகிறார்கள். இப்பகுதிகளில் தொப்பி தூக்கி பாறை , பேரிஜம் ஏரி, மதிக்கட்டான் சோலை போன்ற இடங்கள் அமைந்துள்ளது. மேலும் கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்கள் சுற்றுலா பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிக இருப்பதன் காரணத்தால் சுற்றுலாப் பயணிகளின் நலனை கருதி இன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று கொடைக்கானல் வனத்துறையினர் தெரிவித்தனர்.