வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்;
திண்டுக்கல் திமுக கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் ஓரணியில் தமிழ்நாடு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட திமுக நிர்வாகிகள், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பார்வையாளர் கள்ளிப்பட்டி மணி, நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தேர்தல் பார்வையாளர் கம்பம் பாண்டியன், மாநகராட்சி மேயர் இளமதி நகர, ஒன்றிய, பேரூர், மற்றும் புதிய ஒன்றிய பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.