பவன் கல்யாண் முதல்வராக சிறப்பு பூஜை

ஆந்திர துணை முதல்வர் அவன் கல்யாண் விரைவில் முதல்வராக வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் சிறப்பு பூஜைகளை செய்தனர்;

Update: 2025-06-22 14:17 GMT
மதுரையில் இன்று (ஜூன் .22)நடைபெற்று வரும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள மதுரை வந்த ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் நிகழ்வு கடைசி நேரத்தில் ரத்தான நிலையில் அவரது ஆதரவாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் முருகனை தரிசனம் செய்து பவன் கல்யாண் முதலமைச்சராக விரைவில் பதவியேற்க வேண்டும் என கோரிக்கை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News