இளம் பெண் மாயம். தந்தை புகார்
மதுரை உசிலம்பட்டியில் இளம்பெண் மாயமான அவரது தந்தை புகார் அளித்துள்ளார்;
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நடுமுதலை குளம் அருகே உள்ள கருதப்பிள்ளை கிராமத்தில் ரசிக்கும் செல்வம் என்பவரின் 18 வயது மகள் பத்தாம் வகுப்பு படித்துள்ளார். இவர் நேற்று முன்தினம் (ஜூன் .20) இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த பொழுது வீட்டை விட்டு வெளியே சென்று இருக்கிறார். மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை. இவரை பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் இவரது தந்தை வாலாந்தூர் காவல் நிலையத்தில் நேற்று( ஜூன் .21) இரவு புகார் அளித்துள்ளார் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்ணை தேடி வருகிறார்கள்.