பாம்பு கடித்து மூதாட்டி உயிர் இழப்பு

மதுரை வாடிப்பட்டி அருகே வீட்டில் இருந்த மூதாட்டியை பாம்பு கடித்ததில் உயிரிழந்தார்;

Update: 2025-06-22 14:20 GMT
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அய்யங்கோட்டை எ. கல்லுப்பட்டியில் பழனிச்சாமி என்பவரின் மனைவி பசுபதி( 79) என்பவர் தனது கணவர் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட காரணத்தால் அவரது மகன் துரைப்பாண்டி என்பவருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் .20) இரவு வீட்டில் உள்ளே இருந்த பசுபதியை பாம்பு கடித்துள்ளது. உடனடியாக அவரை மீட்டு சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் இதுகுறித்து மகன் துரைப்பாண்டி வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News