ஆதி திராவிட நலத்துறையில் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம்
ஆசிரியர் நியமனம்;
தஞ்சாவூர் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையில் இயங்கும் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலை, உயர்நிலை, நடுநிலைப் பள்ளிகளில் முதுகலைப் பட்டதாரி மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் தொகுப்பூதியத்தில், தறகாலிகமாக பணிபுரிய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, தஞ்சாவூர் மாவட்டம், அகரப்பேட்டை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் கணினி அறிவியல் பாடப் பிரிவிற்கு, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் - 1, பட்டுக்கோட்டை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் கணினி அறிவியல், உயிரியல், கணிதம் ஆகிய பாடப் பிரிவிற்கு, தலா - 1 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், கீழப்புனவாசல் அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளியில் விலங்கியல் பாடப்பிரிவிற்கு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் - 1 என 5 காலிப்பணியிடங்களும், அகரப்பேட்டை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில், ஆங்கிலம் பாடப்பிரிவிற்கு 1 பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடம், நடுவிக்குறிச்சி, கல்லூரணிக்காடு, புதுக்குடி, மானோஜிப்பட்டி, முத்துவீரக்கண்டியன்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளிகள், சின்ன காங்கேயம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளியில் தலா-1 என 6 சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், திருமலைராஜபுரம், நல்லாடை அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் தலா-1 என 2 ஆங்கில பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களும் என 9 காலிப்பணியிடங்கள் உள்ளன. மேற்கண்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்தில் முதுகலை பட்டப்படிப்பு (M.A., & M.Sc.,) ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் B.Ed., முடித்திருத்தல் வேண்டும். பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்தில் இளங்கலை பட்டப்படிப்பு (B.A.,& B.Sc.,) ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் B.Ed., முடித்திருத்தல் வேண்டும். தற்காலிக முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.18,000/-, முதுகலை பட்டதாரி கணினி பயிற்றுநர் ஆசிரியர்களுக்கு ரூ.15,000/-மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.15,000/- ஊதியமாக நியமிக்கப்பட்டுள்ளது தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியாகவே, அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித் தகுதி சான்று நகல்களுடன், 23.06.2025 முதல் 26.06.2025 பிற்பகல் 05.00 மணிக்குள், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், தஞ்சாவூர் - 613 010 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் முதல்தளத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலஅலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.